சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அடையாறு தியாயோஃபிகள் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி செய்தபோது, அங்கு உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த நடுத்தர வயது பெண்மணி ஒருவர், முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து, நீங்கள் எப்படி மார்க்கண்டேயனாக இருக்கிறீர்கள் என்று வினவியதுடன் கலகலவென் அவருடன் உரையாடினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உடல் நலத்தை பாதுகாப்பதில்  தனி கவனம் செலுத்துவது வழக்கம். வாரத்தில் இரண்டு நாட்கள் சென்னை ஈ.சி.ஆர் சாலையில் சைக்கிளிங் செல்வது மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வதுன் அவ்வப்போது ஜிம்முக்கு சென்று ஒரிக்அவுட் செய்வதும் வழக்கம். சமீபத்தில் இசிஆர் சாலையில்  சைக்கிளிங் செல்லும் போது நடிகை யாசிகா ஆனந்த் முதலமைச்சருடன் செல்பி எடுத்துக்கொண்டார். அதுபோல அவர் ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின்,  சென்னை அடையாறு தியோஃபிகள் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் நடைப்பயிற்சி செய்ய வந்திருந்தார்.

அப்போது, அங்கு  நடைப்பயிற்சி மேற்கொண்ட பலர், முதல்வருடன் இயல்பாக உரையாடினார். அப்போது அவருடன் கலகலவென பேசிய ஒரு பெண்மணி, ” சார் இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்களை நான் ஏர்போட்டில் சந்திச்சேன். நீங்கள் கட்டாயம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று  கூறினேன். இப்போ நீங்கள் ஆட்சிக்கு வந்து வீட்டிர்கள். இது எனக்கு சந்தோஷமாக உள்ளது.

உங்களின் ஆட்சி சிறப்பான உள்ளது, ஒவ்வொரு விஷயத்தையும் நீங்கள் பார்த்து பார்த்து செய்கிறீர்கள். இதை நீங்கள் இப்படியே தொடர வேண்டும் என்று கடகடவென பேசியதுடன்,  கால்பந்து விளையாட ஸ்பெயின் சென்றுள்ள உங்கள் பேரன் வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

அந்த பெண்மணியின் பேச்சு முதல்வருக்க சிரிப்பை வரவழைத்தது. இருந்தாலும் அந்த பெண்மணி விடாமல்,  கடைசியா ஒன்று சார்? என்று கூறியதுடன்,  எப்படி சார் இப்படி மார்க்கண்டேயனாகவே இருக்கீங்க என்று கேள்வியை எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், உடற்பயிற்சி செய்கிறேன் என்று பதிலளிக்க ஆமாம் சார் யூடியூப்பில் உங்கள் வீடியோக்களை பார்க்கிறோம் என்று பதிலளித்தார். தொடர்ந்து அங்கு உடற்பயிற்சிக்கு வந்திருந்த பலர் முதல்வரிடம் உரையாடினர்.

இதுதொடர்பான வீடியோவை  சுகாதாரதுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன , என்றும் மார்க்கண்டேயன்..எங்கள் முதல்வர். இன்று காலை நடைபயிற்சியின்போது பொதுமக்கள் புகழாரம் என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.