முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் கடந்த சில மாதங்களாக உலகளவில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு கருத்துக்கள் மற்றும் போலி செய்திகள் அதிகளவில் பரப்பப்பட்டும் பகிரப்படும் வருகின்றன.

இந்தப் போக்கை மாற்ற வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாகக் கூறி வருகின்றன.

இந்நிலையில், சிறந்த முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு சன்மானம் வழங்க இருப்பதாகவும் அதற்கென 7500 கோடி ரூபாய் செலவு செய்யக் காத்திருப்பதாகவும் முகநூல் நிறுவனத் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

2022 ம் ஆண்டு முதல் இந்த திட்டத்தை தொடங்கப்போவதாக தனது முகநூல் பதிவில் கூறியிருக்கும் அவர், இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியிருக்கிறார்.