காலங்கள் பல கடந்து சென்றாலும் மர்லின் பற்றிய சில வதந்திகள் இன்னமும் உயிர்ப்புடன் உலா வந்து கொண்டே தான் இருக்கின்றன.

1950-களில் பலருக்கும் கனவுத்தாரகையாக இருந்த மஸ்காரா விழிகளால் உலகையே மயக்கிக் கிறங்கடித்த மர்லின் மன்றோ நினைவு தினம் இன்று.

மூன்று திருமணங்கள், ஜான் எஃப் கென்னடியுடனான கிசுகிசுப்புகள், முப்பத்தாறு வயதிலேயே மரணம் என்று சர்ச்சைக்குரிய ‘செக்ஸ்’ சிம்பலாகவே பேசப்படும் மர்லினின் மறுபக்கம் மறைக்கப்பட்ட மர்மம்

சிறுவயதிலேயே தந்தையும் இல்லை. தாய்க்கும் மனநலம் சரியில்லை. ஆதலால் தன்னுடைய குழந்தைப் பருவம் முழுவதையும் அநாதை இல்லங்களிலேயே கழித்திருக்கிறார்

16 வயதிலேயே கட்டாயத் திருமணம், பாலியல் சீண்டல்கள் என பல இன்னல்களைச் சந்தித்தவர்.

தன் கவர்ச்சியால் மட்டுமல்லாமல் காந்தக் குரலாலும் எண்ணற்ற பாடல்களையும் பாடி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் மர்லின்.

அவர் அணிந்திருந்த உடையை மட்டுமே 1,267,500 டாலருக்கு விற்கச் செய்தது மர்லினின் வாழ்நாள் சாதனை.

ஒரு பக்கம் புகழின் உச்சியில் இருந்த மர்லின் மன்றோ இன்னொரு பக்கம் எண்ணற்ற கொடுமைகளை சந்தித்தார்.மன அழுத்தத்தாலும், தூக்கமின்மை போன்ற பல இன்னல்களை சந்தித்தார்.

மர்லின் மன்றோ என்பது இவரது உண்மையான பெயரல்ல பிப்ரவரி 23 ஆம் தேதி 1956 ஆம் ஆண்டு நியூயார்க்கில் இருக்கிற நகர நீதிமன்றத்திலிருந்து நோர்மா ஜேன் மோர்டென்சன் என்ற பெயரை மர்லின் மன்றோ என்று மாற்றிக் கொள்ளும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தன் பெயரை மாற்றிக் கொண்டார்.

மர்லின் மன்றோவிற்கு என்டோமெட்ரியோசிஸ் என்ற நோய் இருந்திருக்கிறது.

கலிஃபோர்னியாவில் இருந்த தன் வீட்டில் கையில் போனுடன் படுக்கையில் குப்புற விழுந்தபடி மரணித்திருந்தார் மர்லின் மன்றோ அந்த நேரத்தில் அவர் நிர்வாணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மர்லின் மன்றோ ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியுடன் உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது, மேலும் அவரது சோகமான முடிவு (ஆகஸ்ட் 4, 1962 அன்று பார்பிட்யூரேட்டுகளின் அளவு காரணமாக) பல சதிக் கோட்பாடுகளைத் தூண்டியது.

அவள் தானே தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டாளா, அது ஒரு விபத்து, அல்லது கென்னடியுடனான சிரமமான உறவின் காரணமாக ரகசிய சேவை அவளை நீக்கியதா? யாரிடமும் இன்னும் திட்டவட்டமான பதில் இல்லை.