சென்னை: மார்ச் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டால் சம்பளம் கட் என மின்சார வாரியமும் அதிரடியாக அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் 28மற்றும் 29ம் தேதிகளில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து  தொழிற்சங்கங்கள்  வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்துக்கு திமுக தலைமை ஆதரவு தெரிவித்து உள்ளது. ஆனால், திமுக அரசு, அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கக்கூடாது என்று அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், 28 மற்றும் 29ம் தேதிகளில் மின்வார ஊழியர்கள் யாராவது வேலை நிறுத்தம் செய்தால், அவர்களுக்கு சம்பளம் கிடையாது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.  வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோர்கள் மீது  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஏற்கனவே போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது மின்வாரியமும் அறிவித்துள்ளது.