டெல்லி: மாடல் அழகி ஜெசிகா லால் கொலை வழக்கில் 17 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த வந்த மனு சர்மா நன்னடைத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

1999ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி டெல்லியில் உள்ள டாமரின்ட் உணவகத்தில் ஒரு சம்பவம் நடந்தது. பின்னர் இந்த சம்பவம் நாடு முழுவதும் மிக பரபரப்பாக பேசப்பட்டது.

தினம் முன்னாள் மத்திய அமைச்சர் வினோத் சர்மாவின் மகன் மனு சர்மா என்பவர் உணவகத்தில் வைத்து ஜெசிகா லால் என்ற மாடல் அழகியை சுட்டுக் கொன்றார். மதுபானம் ஊற்றித் தருமாறு மனுசர்மா கூறியதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஜெசிகா லால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது வழக்காகும்.

இந் வழக்கில் கீழமை நீதிமன்றம் மனு சர்மாவை விடுவித்தது. ஆனால், அதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது, மனு சர்மா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. அதனை தொடர்ந்து அவர் திகார் சிறையில் தண்டனையை அனுபவித்து வந்தார்.

14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ஒரு கைதி நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்படுவார். அதன்படி, சிறையில் 17 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தண்டனையை அனுபவித்த நிலையில், நன்னடத்தை கருதி அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அதற்கான உத்தரவை டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் பிறப்பித்து உள்ளார். ஆளுநர் உத்தரவை அடுத்து, டெல்லி திகார் சிறையில் இருந்து அவர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டார்.