டில்லி

சீனப் பொருட்களின் தேவை இந்தியாவில் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து நாம் இங்குக் காண்போம்

உலக நாடுகள் அனைத்திலும் சீனப் பொருட்களின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது.   ஏனெனில் சீனாவில் இருந்து அனேகமாக அனைத்து வகைப் பொருட்களும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.    அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஐரோப்பிய யூனியன் நாடுகள் எனப் பல நாடுகளுக்கும் சீனப் பொருட்கள் 22.25% ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இவ்வாறு சீனா தனது பொருட்களை ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.  தற்போதுள்ள நிலையில் இந்தியா சீனா நாடுகளின் இடையில் எல்லையில் படைக் குவிப்பு நிகழ்ந்துள்ளதால் அது வர்த்தகத்தில் நிச்சயம் எதிரொலிக்கும் என நம்பப்படுகிறது.  தற்போதைய நிலையில் சீனப் பொருட்களின் தேவை இந்தியாவில் எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் காண்போம்.

இந்தியாவுக்கு சீனாவில் இருந்து அடிப்படை ரசாயனம், பிளாஸ்டிக்குகள் , விவசாய இடைப்பொருட்க்ள் போன்ற மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன இது மட்டுமின்றி,  ஆட்டோமொபைல், இயந்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் எனப் பல பொருட்களும் இறக்குமதி ஆகின்றன.  இன்னும் சொல்லப்போனால் மொத்த ஆட்டோமொபைலில் 20% மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களில் 45%  மொபைல் போன்றவற்றில் 70% ,மற்றும் தோல் பொருட்களில் 40% சீனாவில் இருந்து மட்டும் இறக்குமதி ஆகின்றன.

இந்த இறக்குமதியை குறைக்க மேக் இன் இந்தியா என்னும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.   இதில் ரசாயனத்துறையில்,  பாலாஜி அமைன்ஸ், நோசில் ரப்பர் கெமிகல்ஸ், ஹிமாத்ரி ஸ்பெஷாலிடியின் கார்பன் பிள்ளக், பன்சாலி இஞ்சினியரிங்கின் பிளாஸ்டிக்  பொருட்கள் ஆகியவை வளர்ந்து வந்துள்ளன.   ஆனால்  ஒரு சில ரசாயனத் தொழிற்சாலைகளுக்கான மூலப் பொருட்கள் சீனாவில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படும் நிலை உள்ளது.

இதைப் போல் மருந்து நிறுவனங்களான ஆர்த்தி டிரக்ஸ், கிரான்யூல்ஸ் இந்தியா, ஜேபி கெமிகல்ஸ், ஐ ஓ எல் கெமிகல்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்கல் மூலப் பொருட்களுக்கு முழுக்க முழுக்க சீன இறக்குமதியை மட்டுமே நம்பி உள்ளன.    இந்நிறுவனஙக்ல், பாரசிடிமால், மெட்ரொனைடசோல், மற்றும் இபுப்ரோஃபென் போன்ற வழக்கமான மருந்துகளைத் தயாரிப்பதால் சீனத் தேவையை முழுவதும் நம்ப வேண்டி உள்ளது.

அதே வேளையில் சீனப் பொருட்களுக்குப் பதில் இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.   இவற்றில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகும் துணிமணிகள்,  மருந்துகள், ரசாயனங்கள், வாகனங்கள், மற்றும் ஃபர்னிச்சர்கள் முக்கிய இடத்தில் உள்ளன.  ஆயினும் மீன் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள், கம்பளங்கள் போன்றவை  இந்தியாவைப் போலப் பல மடங்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அமெரிக்காவுக்கு இந்தியாவைத் தவிர கொரியா, தைவான், வியட்நாம் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளும் அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்றன.

மொத்தத்தில் இந்தியா வர்த்தக ரீதியாகச் சீனாவுக்குச் சமமாக வளரும் நிலையில் இருந்தாலும், இந்திய நிறுவனங்களில் பல சீன மூலப் பொருட்களின் தேவையை நம்பி உள்ளன.  எனவே சீன வர்த்தகத்தை நிறுத்தினால் அது இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாடு வர்த்தகத்தை வெகுவாக பாதிக்க நேரிடலாம்

மேலும் மற்ற நாடுகளில் இருந்து மூலப் பொருட்களை இறக்குமதி செய்து  இந்தியப் பொருட்களைத் தயாரிப்பதால் அதன் விலை வெகுவாக உயர வாய்ப்புள்ளது  தற்போதுள்ள நிலையில் இந்திய வர்த்தகத்துக்கு ஆசிய நாடுகளான வியட்நாம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் போட்டிகள் அதிகம் உள்ளதால் விலையை உயர்த்த முடியாத நிலையில் இந்தியா உள்ளது.