உலன்-உதே: ரஷ்யாவில் நடைபெற்றுவரும் பெண்களுக்கான உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் மஞ்சு ராணிக்கு 48 கி.கி எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் எகத்ரீனாவிடம் தோல்வியடைந்தார்.

இதே தொடரில், தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட மேரி கோம், 51 கி.கி எடைப்பிரிவின் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கமே வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தங்க ஆசையை மஞ்சு ராணி நிவர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவருக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.

அதேசமயம், உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வது மஞ்சு ராணிக்கு இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2001ம் ஆண்டில் மேரிகோம் செய்ததைப்போல, தான் கலந்துகொண்ட முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலேயே வெள்ளிப் பதக்கம் வென்று, அச்சாதனையை செய்த இந்தியாவின் இரண்டாவது வீராங்கணை என்ற பெயரை, வெள்ளியுடன் சேர்த்தேப் பெற்றுள்ளார்.