டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, 14ம் தேதி கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட, வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனாலும், காய்ச்சலும், மூச்சு திணறலும் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதும் பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, சிசோடியாவை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந் நிலையில், சிசோடியாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. கொரோனா மற்றும் டெங்கு ஆகிய இரண்டினாலும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல்கள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒரு நிலையான நெறிமுறை இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.