கவுகாத்தி
மணிப்பூர் மாநில பெண் காவல்துறை அதிகாரி போதை மருந்து கடத்தும் ஒருவரை விடுவிக்க அம்மாநில முதல்வர் வற்புறுத்தியதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநில காவல்துறை அதிகாரியான பிரிந்தா போதை மருந்து கடத்தல் குற்றவாளிகளைப் பிடிப்பதில் பெரும் பங்கு ஆற்றி உள்ளார். இதற்காக அவர் பல விருதுகள் பெற்றவர் ஆவார். இவர் கடந்த 2018 ஆம் வருடம் ஜூன் மாதம் 18 ஆம் தேதி இவர் லுகோசே ஸுவோ என்னும் போதை மருந்து கடத்தல் காரரை அவருடைய 7 கூட்டாளிகளுடன் பிடித்தார். ஸுவோ மாவட்ட தனித்துவக் குழு தலைவராக இருந்தார். இது அப்போது கடும் பரபரப்பை உண்டாக்கியது.
அவரிடம் இருந்து 4595 கிலோ ஹெராய்ன், 2,80,200 போதை மாத்திரைகள், ரூ.57.18 லட்சம் ரொக்கம், ரூ.95000 பழைய நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தவிர வேறு பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த பறிமுதலுக்கு பிறகு பிரிந்தாவுக்கு மணிப்பூர் மாநில பாஜக துணைத் தலைவர் மொயிரங்தம் அச்னிகுமாரிடம் இருந்து வாட்ஸ் அப் அழைப்பு வந்துள்ளது. அதன்படி அவர் மணிப்பூர் முதல்வருடன் பேசி உள்ளார்
இது குறித்து பிரிந்தா, “நான் முதல்வரிடம் ஸுவோ வீட்டில் மேலும் போதை மருந்துகள் இருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளதால் அவர் வீட்டைச் சோதனை இடவும் அவரை கைது செய்யவும் உள்ளதாகத் தெரிவித்தேன். முதல்வர் என்னைப் பாராட்டி ஸுவோ வீட்டில் போதை மருந்துகள் கிடைத்தால் அவரை கைது செய்யலாம் எனத் தெரிவித்தார். ஆனால் சோதனையின் போது ஸுவோ என்னிடம் ஒரு ஒப்பந்தக்கு வரலாம் எனக் கேட்டுக் கொண்டதற்கு நான் ஒப்புதல் வரவில்லை.
அவருடைய வீட்டில் ஏராளமான போதை மருந்துகள் பிடிபட்டன. அவர் தம்மை காவல்துறை தலைவரிடமும் முதல்வரிடமும் பேச அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டர். நான் அதை அனுமதிக்கவில்லை. அப்போது அச்னிகுமார் எனது இல்லத்துக்குக் கோபமாக வந்தார். ஸுவோ தனித்துவக்குழ் தலைவர் என்பதால் அவர் முதல்வர் மனைவி ஆலிஸ் க்கு வேண்டியவர் எனவும் அவரை கைது செய்தால் ஆலிஸ் என் மீது கோபம் அடைவார் எனவும் பயமுறுத்தினர்.
அத்துடன் ஸுவோவுக்கு பதிலாக அவர் மனைவி அல்லது மகனைக் கைது செய்யுமாறும் இவரை விடுவிக்குமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அச்னிகுமார் தெரிவித்தர். நான் இந்த போதை மருந்துகள் ஸுவோவிட்ம் இருந்து கைப்பற்றப்பட்டதால் அவர் மனைவி அல்லது மகனைக் கைது செய முடியாது எனக் கூறி ஸுவோவை விடுவிக்க மறுத்தேன். அச்னிகுமார் அங்கிருந்து சென்று விட்டார். மீண்டும் அச்னிகுமார் எனது இல்லத்துக்கு வந்து முதல்வரும் அவர் மனைவியும் கோபமாக உள்ளதால் நான் ஸுவோவை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
நான் அதற்கு மறுத்து விசாரணை நடந்து இது குறித்து நீதிமன்றம் முடிவு எடுக்கும் என அவரிடம் தெரிவித்தேன். எனது குழுவில் 150 பெருக்கும் மேல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் போது இவரை விடுதலை செய்தால் நான் அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எப்படி விளக்கம் அளிக்க முடியும் எனக் கேட்டேன். பதிலளிக்காமல் சென்ற அவர் மூன்றாம் முறையாக வந்து நான் ஸுவோவை விடுவிக்க வேண்டும் என முதல்வரும் அவர் மனைவியும் பிடிவாதமாக உள்ளதாக தெரிவித்தார்
நான் அவரிடம் இந்த பணிக்கு டில்லியின் ஆணைப்படி வந்துள்ளதால் நான் எனது பணியில் குறுக்கீடு வந்தால் பணியை விட்டு விலகவும் தயாராக உள்ளேன். எனத் தெரிவித்தேன். இவ்வாறு முதல்வர் தனது மனைவியின் விருப்பத்துக்காக எனது பணியைச் செய்ய விடாமல் தடுத்தார். ஆயினும் நான் ஸுவோவை விடுவிக்கவில்லை. “ எனப் பிரமாணப் பத்திரம் அளித்துள்ளார்
மேலும் பிரிந்தா,”இதற்கு பிறகு அப்போதைய காவல்துறை சூப்ரண்ட் என்னிடம் வந்து கேட்டுக்கொண்டும் நான் ஸுவோவை விடுவிக்க மறுத்தேன். அதன்பிறகு நாங்கள் காவல்துறைத் தலைவரைச் சந்தித்தோம். அவர் நான் தயாரித்த குற்றப்பத்திரிகை எங்கே எனக் கேட்டார். நான் அவரிடம் அதை நீதிமன்றத்தில் அளித்துள்ளதாகத் தெரிவித்தேன். அதை நீதிமன்றத்தில் இருந்து நீக்குமாறு முதல்வர் விரும்புவதாக கால்வதுறை தலைவர் தெரிவித்தார்.
நான் அது முடியாத காரியம் எனக் கூறினேன். ஆனால் முதல்வர் அவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக அவர் என்னிடம் தெரிவித்தார். ஆனால் நான் அதற்கு மறுத்தேன் அன்று மாலை என்னிடம் காவல்துறைத் தலைவர் அவர் முதல்வரைச் சந்தித்ததாகவும் நீதிமன்றத்தில் இன்னும் குற்றப்பத்திரிகை நீக்கப்படாமல் உள்ளதால் முதல்வர் என்மீது கடும் கோபத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார் என பிரமாண பத்திரத்தில் கூறி உள்ளார்.
கடந்த 2019 ஆம் வருடம் ஜனவரி மாதம் 1 ஆம்தேதி அன்று சிறப்பு நீதிபதி யும்காம் ராதர் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.அந்த கடிதத்தில் அவர் காவல்துறைத் தலைவர், பார் கவுன்சில் தலைவர் ஆகியோர் மூத்த வழக்கறிஞர் சந்திரஜிட் சர்மா ஆகியோர் தம்மை அரசு வழக்கறிஞர் பிபின்சந்திராவுடன் சந்திக்க உத்தரவிட்டிருந்தார். அப்போது அவர் விசாரணை அதிகாரியிடம் ஸுவோ மீதான குற்றப்பத்திரிகையை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த செய்தி 2019 மார்ச் 13 அன்று செய்தி தாட்களில் வெளியானது.
இதையொட்டி பிரிந்தாவையும் மற்ற காவல்துறை அதிகாரிகளையும் முதல்வர் தமது இல்லத்துக்கு அழைத்துள்ளதாக பிரிந்தா முகநூலில் தெரிவித்திருந்தார். அப்போது முதல்வர் பிரிந்தாவிடம், “இதற்காகத்தான் நான் உங்களுக்கு விருதுகள் அளித்தேனா? அலுவலக ரகசியம் என ஒன்று இருபது தெரியாதா?” எனக் கேட்டாராம். தம்மையும் சூப்பிரண்டையும் முதல்வர் திட்டி தீர்த்ததாக தெரிவித்துள்ள பிரிந்தா சட்டப்படி பணி ஆற்றியதற்கு முதல்வர் கோபம் கொண்டது ஏன் என தமக்கு இன்னும் புரியவில்லை எனவும் முகநூலில் பதிந்துள்ளார்.