ம்பால்

ணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூரில் வன்முறை நீடித்து வருகிறது.  இதையொட்டி, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அனைத்து எதிர்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்..

மெய்தி மறும் குக்கி இன மக்கள் இடையே நடைபெறும் வன்முறையில் மணிப்பூர் பொதுமக்கள் பலரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நேற்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரேன் சிங் மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் ராஜினாமா கடிதத்தை பிரேன் சிங் வழங்கினார். அப்போது மணிப்பூர் மக்களுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்த மத்திய அரசுக்கு நன்றி என்று பிரேன் சிங் கூறியுள்ளார்.