ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக மனுவா? மேனகா தரப்பு பதில்

Must read

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக மனுவா? மேனகா தரப்பு பதில்

 

 

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை தடை செய்ய கோரி, மத்திய பாஜக அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.
இந்த நிலையில் மேனகா தரப்பை நமது patrikai.com தொடர்புகொண்டு கேட்டபோது, “மேனகா எப்போதுமே உயிர்களின் ஆர்வலர்தான். விலங்குகள் என்றில்லை.. அனைத்து உயிர்களின் மீதும் பேரன்பு செலுத்துவபவர். ஜல்லிக்கட்டு மீது அவருக்கு மாறுபட்ட கருத்து உண்டுதான். ஆனால், தற்போது தமிழக அரசு பிறப்பித்திருக்கும் அவசர சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேனகா மனுத்தாக்கல் எதுவும் செ்யயவில்லை” என்று தெரிவித்தார்கள்.

More articles

Latest article