சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை விடப்படுவமாக அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

மாண்டஸ் புயல், சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்  என சென்னை வானிலை மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கும். இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும்  (10ந்தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வெளியிட்டு உள்ளனர்.