சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், திருவள்ளுர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் அறிவித்து உள்ளார்.

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டல் புயல் காரணமாக, இன்று தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புயல் நாளை இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால், இன்றுமுதல் 10ந்தேதி வரை சென்னை உள்பட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தொடர்ந்து 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்  அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.