கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை 4 மணியளவில் மண்டல பூஜை தொடங்கியது. மண்டல பூஜை நிறைவுநாளையொட்டி இன்று 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக  நடை திறக்கப்பட்டது. இதையடுத்து  லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருகை தந்தது அய்யப்பன் ஆசி பெற்று செல்கின்றனர்.  நடை திறக்கப்பட்டு  கடந்த 39 நாட்களில் (நேற்று முன்தினம் வரை) 29 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.  இதில் 20 சதவீதம் பேர் குழந்தைகள் என  தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது. அதுபோல, ரூ.222 கோடியை 98 லட்சத்து 70 ஆயிரித்து 250 வருமானம் கிடைந்துள்ளது.  இதில் காணிக்கையாக ரூ.70 கோடியை 10 லட்சத்து 81 ஆயிரத்து 986 வசூலானது தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

இன்று மண்டல பூஜை தொடங்குவதையொட்டி, நேற்று  தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனால், நேற்று மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை.  அதன்பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, இன்று மண்டல பூஜைக்காக  அதிகாலை காலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து,  களபாபிஷேகத்திற்கு பிறகு நண்பகல் 12.30 மணி முதல் 1 மணி வரை தந்திரி கண்டர ரூராஜீவரு தலைமையில் மண்டல சிறப்பு பூஜை நடைபெறும்.  தொடர்ந்து, இரவு 10 மணிக்கு நடைசாத்தப்பட்டு, மண்டல பூஜை நிறைவு பெறுகிறது.  மேலும், இன்று நடைபெறும் மண்டல பூஜைக்கு  ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

பின்னர்  மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை வருகிற 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். மகர ஜோதி தரிசனம் 14-ஆம் தேதி பொங்கலன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.