டில்லி:

டில்லி வனவிலங்கு சரணாலயத்தில், குடிகாரர் ஒருவர் போதையில் சிங்கத்துடன் மல்லுக்கு நின்ற திக் திக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவத்தன்று பீகாரைச் சேர்ந்த ரேகான் கான் என்ற 28வயது இளைஞர், முழு போதையில், டில்லி வனவிலங்கு சரணாலயத்தை பார்வையிட வந்தார். அப்போது  சிங்கம் அடைக்கப்பட்டுள்ள பகுதியைப் பார்த்தவர், திடீரென, கம்பி வேலியில் ஏறி சிங்கம் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள், குதித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், அந்த நபரை நோக்கி உள்ளே அடைக்கப்பட்டிருந்த ஆண் சிங்கம் ஒன்று ஓடி வந்தது. ஆனால், அந்த குடிகார நபர், அந்த சிங்கத்தின் முன்னே அமர்ந்தவாறு, அசராமல் நேருக்கு நேராக மோத தயாரான நிலையில் இருந்தார்.

இதைக்கண்டன பார்வையாளர்கள் பதற்றம் அடைந்தனர். இந்த திக் திக் காட்சியை கண்டவர்கள் கூச்சலிட்ட னர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த  சரணாலய ஊழியர்கள், அந்த நபரை மீட்க அந்த பகுதிக்குள் நுழைந்தனர், ஆனால், அந்த குடிகாரரோ, சிங்கத்தை எதிர்கொள்ளும் நோக்கில் மீண்டும்  சிங்கத்தை நோக்கி ஓடினார்.

ஆனால், சரணாலய ஊழியர்களை அவரை மடக்கி படித்து வெளியே கொண்ட வந்தனர். பின்னர் காவல்துறை யில் ஒப்படைத்தனர். இந்த திக்திக் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிங்கத்தை நேருக்கு நேர் எதிர்கொண்ட குடிகாரன்- வீடியோ

https://www.youtube.com/watch?v=sWiq6SOOk7g

Video Courtesy : ANI