சிங்கப்பூர்:
றைந்த தனது காதலியைப்போலவே (!)  இருப்பதாகக் கூறி, வெள்ளை நிற நாகப் பாம்புடன் வாலிபர் வசித்து வருவது சிங்கப்பூரில்  பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் வோரணன் சரசலின். இவர் உயிருக்குயிராக காதலித்து வந்த இளம்பெண், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். அதன் பிறகு,தான் இந்த நாகப்பாம்புடன் வசித்து வருகிறார்.
untitled
இது குறித்து வோரணன் சரசலின், “காதலி இறந்த சோகத்தில் வாழ்க்கையே வெறுத்துப்போயிருந்தேன். அப்போது ஒரு ஓட்டலுக்குச் சென்றேன். ஓட்டலின் மேற்கூரையில் இருந்து திடீரென இந்த நாகப்பாம்பு விழுந்தது. அனைவரும் பயந்து அலறியபடி ஓடினர்.
ஆனால் இந்த பாம்பு, என் காதலியின் தோற்றத்தில் இருந்தது(!). ஆகவே நான் பயப்படாமல், அந்த பாம்பை தொட்டுத் தூக்கினேன். அதுவும் சீறாமல் வந்தது. அதன் பிறகு அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று, அதனுடன் வசித்து வருகிறேன்” என்கிறார்.
pp
இந்த பாம்புடன்தான் வோரணன் சரசலின் அதிக நேரத்தை கழிக்கிறார்.  அதனுடன் வாழ்கிறார் என்றே கூறலாம். அந்த பாம்புடன் பாசத்துடன் பேசுகிறார். விளையாடுகிறார். டிவி பார்க்கும்போது அருகில் அமர வைத்துக் கொள்கிறார்.  பூங்கா, உடற்பயிற்சி கூடத்துக்கும் உடன் அழைத்துச் செல்கிறார்.
பூங்காவுக்குச் செல்லும்போதும், உடன் அழைத்துச் செல்கிறார்.
”இந்த மாதிரி நாகப்பாம்புடன் நெருங்கிப் பழகுவது தவறு.  விலங்குகள் என்றும் விலங்குகள்தான். அவை மிகவும் ஆபத்தானவை” என்று  பலர்லர் எச்சரித்தும் இந்த வாலிபர் காது கொடுத்து கேட்கவில்லை.
வோரணன் சரசலின் புத்த மதத்தைச் சேர்ந்தவர்.  புத்த மதத்தில், இறந்தவர்கள் விலங்குகளாக மறுபிறவி எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு. ஆகவே,  இறந்த தனது காதலிதான் பாம்பாக மறுபிறவி எடுத்துள்ளார் என்று இந்த வாலிபர் உறுதியாக நம்புவதாகச் சொல்கிறார்.
மேலும், “’உண்மையான காதல்  என்றும் தோற்காது” என்று நம்முடைய தமிழ் ஹீரோக்கள் போல பஞ்ச் டயலாக் அடிக்கிறார்.
இவரது கதையை யாராவது  சினிமாவா எடுங்கப்பா!