மெரிக்கா : சென்னையை பூர்விகாமாக கொண்ட கமலா ஹாரீஸ் தான் அமெரிக்காவின் முதல் பெண் அமெரிக்க அதிபராக தேர்ந்தெர்டுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக ஆவார் என்ற எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் அவர் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சென்னை பெண்மணியான கமலா ஹாரிஸ்தான் அமெரிக்காவின் முதல் பெண் அதிராபராக வருவார் என்று அமெரிக்க ஊடகங்கள் கணித்துள்ளன.
கமலா ஹாரிஸின் தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் இருந்து அமெரிக்கா சென்றார். அங்கு குடியுரிமையும் பெற்றார். சியாமளாவின் தந்தை ஜமைக்காவை சேர்ந்த, அமெரிக்க குடிமகன். இவர் கலிபோர்னியா அரசு தலைமை வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார் .
இந்த நிலையில் அரசியலில் ஈடுபட்டார் சியாமளா கோபாலன். தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த பிரபல பெண் தலைவர்களில் ஒருவராவார்.\
கலிப்போர்னியா மாகாண அட்டர்னி ஜெனரலாக இருந்த கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் கலிபோர்னியா செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட லோரட்டா சான்செஸ் என்பவரை சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அபார வெற்றி பெற்றார்.
aaa
இதையடுத்து அடுத்த  அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற கருத்தை பலரும் வெளியிட்டு வருகிறார்கள். ஊடகங்கள் பலவும் இதே கருத்தை வெளிப்படுத்தி உள்ளன.  அமெரிக்காவின் பிரபல இணைய இதழான  ‘ஹஃபிங்டன் போஸ்ட்’ இது குறித்து விரிவான கட்டுரை எழுதி உள்ளது. அக்கட்டுரையில்  கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக வரக்கூடும் என குறிப்பிட்டுள்ளது