மியான்மர்,
பேஸ்புக் சமூக  இணைய தலைதளத்தில் அவதூறாக செய்தி வெளியிட்டது தொடர்பாக,  அவதூறு வழக்கில் பத்திரிகை தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மியான்மரின் லெவன் மீடியா குரூப் பத்திரிகை நடத்தி வருகிறது. இதன் தலைமை நிர்வாகியாக தான் ஹட் ஆங் இருந்து வருகிறார். தலைமை ஆசிரியராக வெய் பியோ இருந்து வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த பத்திரிகையில் ஆங் சான் சூகி கட்சி நிர்வாகி ஒருவர் குறித்து அவதூறு செய்தி வெளியானது. அதை  அந்த பத்திரிகையின், சமூக வலைதளமான பேஸ்புக் வலைதளத்தில் போஸ்ட் செய்யப்பட்டது.
miyanmar1
அந்த செய்தியில் முன்னாள் அரசியல் கைதியும், ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் கட்சியின் முக்கிய தலைவருமான பியோ மின் தெய்ன் ஊழல் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து, தன் மீது அவதூறு பரப்பியதாக அந்த பத்திரிகை ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குனர் மீது அவதுறு பியோ மின் தெய்ன் வழக்கு தொடரப்பட்டது.
இதனடிப்படையில் அவர்கள் இருவருக்கும் போலீசார் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் இன்று சரணடைந்தனர்.
அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் இருவர் மீதும் சர்ச்சைக்குரிய தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டமானது மிரட்டல், கடத்தல், தொந்தரவு, அவதூறு, முறைகேடான செல்வாக்கு போன்றவற்றை ஊடகம் பயன்படுத்துவதை தடை செய்கிறது.