இரவில் மட்டும் பெண்ணாக மாறும் கணவன்!: போலீசில் மனைவி புகார்!

Must read

பெங்களூருவில் இளைஞர் ஒருவர் தினமும் இரவில் பெண்களைப் போல சேலை அணிவதால் அதிர்ந்துபோன மனைவி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

படம்: மாடல்

பெங்களூருவில் உள்ள கோரமங்களா பகுதியைச் சேர்ந்த பெண்மணி 29 வயதான  புஷ்பா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில்  பணியாற்றுகிறார்.
கடந்த ஆண்டு இவருக்கும் மகேஷ்  (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் திருமணம் ஆனது. இவரும் சாப்ட்வர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர்தான்.
இந்த நிலையில் புஷ்பா பெங்களூரு  இந்திரா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “எனது கணவர் திருமணமான முதல் நாள் இரவே பெண்களைப் போல சேலை அணிந்துகொண்டு தூங்கினார். பெண்ணைப் போலவே அவரது நடைஉடை பாவனை இருக்கிறது.  பகலில் மற்ற ஆண்களைப் போல பேண்ட், சட்டை அணிந்துகொண்டு அலுவலகம் செல்கிறார்.
அவரை பலமுறை கண்டித்தும் திருந்தவே இல்லை. பிறகுதான் தெரிந்தது, அவர் ஓரினச்சேர்க்கையில் நாட்டமுள்ளவர்.  ஆகவே, அவரிடம் இருந்து பிரிந்து வாழ உதவுங்கள்” என்று கோரியிருந்தார்.
இதையடுத்து போலீஸார் அங்குள்ள மகளிர் உதவி மையத்திற்கு இருவரையும் அனுப்பி மனநல ஆலோசனை அளித்தனர். அப்போது மகேஷ் தான் பெண்ணாக மாற விரும்புவதாகவும் தனது மனைவி தன்னை விட்டுப் பிரிந்துசெல்ல அனுமதிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து இருவரும் கோர்ட்டை அணுகி விவாகரத்து பெற்றுக்கொள்ளும்படி மகளிர் உதவி மையத்தினர் ஆலோசனை அளித்தனர்.

More articles

Latest article