டெல்லி: மேற்கு வங்கத்தில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 25,000 பள்ளி ஆசிரியர்கள் நியமனம் ரத்து செய்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், மத்திய புலனாய்வு அமைப்பான (சிபிஐ) தனது விசாரணையைத் தொடர அனுமதித்த உச்ச நீதிமன்றம், தேவைப்பட்டால் மாநில அமைச்சரவை உறுப்பினர்களைக் கூட விசாரிக்கலாம் என்று கூறியது.
மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க மாநிலத்தில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமன ஊழல் தொடர்பான வழக்கில் மேற்குவங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றமும், முறைகேடாக பணி பெற்ற 25,753 பேர் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் பெற்றவர்லகளின் நியமனத்தை அதிரடியாக ரத்து செய்தது. இது அம்மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலை உருவானது.
இதையடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேற்குவங்க மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி,பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர்அடங்கி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. நீண்ட வாதங்களுக்குப் பிறகு 25,753 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடைவிதித்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேற்கு வங்கத்தில் அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில பள்ளிக்கல்வித் துறை மூலம் 25,753 பேர் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டனர்
இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததால் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில், 2014 முதல் 2021ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜியிடம் கடந்த 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிபிஐ விசாரணை நடத்தியது. இதைத்தொடர்ந்து இன்று காலை சட்டர்ஜி கைது செய்யப்பட்டார். சட்டர்ஜியின் தோழியான அர்பிதா முகர்ஜியையும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவரது வீட்டிலிருந்து சுமார் 21 கோடி ரூபாய் ரொக்கத்தையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் சட்டர்ஜி கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அமைச்சர் சட்டர்ஜி கைது தொடர்பாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி விளக்கமளிக்க வேண்டும் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் ஊழலில் மூழ்கியுள்ளது என்பதையே இந்த கைது நடவடிக்கை காட்டுகிறது என்றும் பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் தெரிவித்திருந்தார். இதை
இதுதொடர்பான வழக்கை விசாரித்த வந்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், மேற்கு வங்கத்தில் அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில பள்ளிக்கல்வித் துறை மூலம் 25,753 பேர் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டனர். இதில் ஊழல் நடந்திருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி கொல்கத்தா உயர்நீதிமன்றம் அந்தப் பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டது. இது மம்தா பானர்ஜி அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மேற்குவங்க அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவில், கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஆசிரியர் பணியிடங்களை தன்னிச்சையாக ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு பள்ளிக் கல்வியில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும். புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ள சூழ்நிலையில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மாணவர்கள் மோசமாக பாதிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்று வழக்கறிஞர் அஸ்தா சர்மா மூலம் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் மேற்கு வங்க அரசு தெரிவித்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துது. மேலும், வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், மேற்கு வங்க மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்ததுடன், “சிபிஐ விசாரித்து வரும் 8,000 ஆசிரியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதியானால் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அவர்களுக்கு பொருந்தும். மேலும், அவர்கள் தாங்கள் பெற்ற சம்பளத்தை திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
அரசு வேலை மிகவும் அரிதானது. அதன் மீதுள்ள பொதுமக்களின் நம்பிக்கை பொய்த்துப் போனால் எதுவும் மிஞ்சாது. இது,அமைப்பு முறை சார்ந்த மோசடி. சமூக இயக்கத்துக்கு அரசு வேலைமிகவும் முக்கியமானது. இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்கள் அதன் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிடுவர். அதை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?
ஆசிரியர் பணி நியமனங்களுக்கான தரவுகள் மற்றும் ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பராமரிக்க நீங்கள் கடமைப்பட்டவர்கள். ஆனால், இப்போது அந்த தரவுகள் உங்களிடம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. உங்களுக்கு சேவை வழங்குபவரிடம் உள்ள தரவுகளை கட்டுப்பாட்டுடன் பராமரிப்பது உங்களின் கடமை” என்று மேற்கு வங்க மாநில அரசை கடுமையாக சாடினார்.
மேற்குவங்கத்தில் முறைகேடாக ஆசிரியர் பணி நியமனம் பெற்ற 1,911 பேர் பணி நீக்கம்! நீதிமன்றம் அதிரடி