ரூ. 2000 கோடி போதை மருந்து கடத்தல் வழக்கில் நடிகை மம்தா குல்கர்னி!

Must read

mam

மும்பை: ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கில் நடிகை மம்தா குல்கர்னி  முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 18.5 டன் எஃபிட்ரைன் என்ற ஊக்க மருந்து கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் 10 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில்,  தானே போலீஸார் மம்தா குல்கர்னியையும் இவ்வழக்கில் சேர்த்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் கென்யாவில் நடந்த போதை கும்பலுடனான சந்திப்பில் மம்தா குல்கர்னி, அவரது கணவர் விக்கி கோஸ்வாமி, அவரது தொழில்முறை நண்பர் டாக்டர் அப்துல்லா,  ஏவான் லைஃப்சயின்சஸ் நிறுவனத்தின் இயக்குநர் மனோ ஜெயின், ஜெய் முகி அகியோர் கலந்து கொண்டதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
மம்தாவின் கணவர் விக்கி கோஸ்வாமி மீது ஏற்கெனவே போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் மேலும் சில பாலிவுட் பிரபலங்களும் சிக்குவார்கள் என  காவல்துறையின் தரப்பில் கூறப்படுவதால் பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

mumbai police, போதை மருந்து, மும்பை போலீஸ்

 
 
 
 

 

More articles

Latest article