1westசிங்கூர்:
டாட்டா நிறுவனத்தினரால் திருப்பி கொடுக்கப்பட்ட நிலத்துக்கான ஆவனங்களை விவசாயிகளிடம் இன்று ஒப்படைக்கிறார் மேற்குவங்க முதல்வர்  மம்தாபானர்ஜி.
இன்று நடைபெற இருக்கும் விழாவில். விவசாயிகளிடமிருந்து டாட்டா மொட்டார்ஸ் பறித்த 9,117 நிலப்பட்டாக்களை அவர்களிடமே திரும்பி வழங்குகிறார். இதற்காக சிங்கூர் வந்திருக்கிறார்ம ம்தா பானர்ஜி.
கடந்த 2006-ம் ஆண்டு மேற்குவங்க மாநிலம் சிங்கூரில்  997.11 ஏக்கர் விவசாய நிலம், விவசாயிகளின் விருப்பத்துக்கு முரணாக அவர்களிடமிருந்து பறித்து நானோ கார் ஆலைக்காக டாடா நிறுவனத்துக்கு அளிக்கப் பட்டது. இதைச் செய்தது அப்போதய மார்ஸிஸ்ட் அரசு
இதை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் தீவிரமான போராட்டங்களை நடத்தினர். மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியும் இது சம்பந்தமான தொடர் போராட்டங்களை நடத்தியது. மம்தா பானர்ஜி 26 நாட்கள் உண்ணாவிரதமும் இருந்தார்.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் நிலத்தை திருப்பி அளிப்போம் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம்  31-ம் தேதி வழங்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் சிங்கூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 12 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்குத் திருப்பி அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதி மன்றத்தின் ஆணையையும், தனது வாக்குறுதியையும் ஒருங்கே நிறைவேற்றும் வகையில் மம்தா இப்போது சிங்கூரில் முகாமிட்டிருக்கிறார்.
இந்த நாள் சிங்கூர் தினம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.