ட்டாக்

டிசாவில் நடந்த ரயில் விபத்துக்கான உண்மைக் காரணம் வெளி வர வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று மேற்கு வங்க மாநிலத்தின் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட 3 ரயில்கள் மோதிக் கொண்டன.  இந்த விபத்தில் இதுவரை 278 பேர் உயிரிழந்து 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் பலர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்.

வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் விபத்து நேரிட்ட நிலையில், மறுநாள் சம்பவ இடத்துக்கு வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, விபத்து குறித்து விசாரித்து அறிந்தார். அவர் ஒடிசாவின் கட்டாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் மம்தா பானர்ஜி, “விபத்தில் உயிரிழந்தவர்களில் 103 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு. 97 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 31 பேர் குறித்த தகவல் இல்லை. ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதால் விபத்துக்கான உண்மைக் காரணம் வெளிவந்தாக வேண்டும்” என தெரிவித்துள்ளார்.