டில்லி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒடிசா ரயில் விபத்து குறித்து தமது வேதனையை தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு ஒடிசா மாநிலத்தில் இரு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் சுமார் 230 பேர் உயிர் இழந்துள்ளனர். நூற்றுக் கணக்கனோர் படுகாயம் அடைந்துள்ளனர். மரணம் அடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,
“மேற்கு வங்கத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பாலசோர் அருகே விபத்துக்குள்ளானதில் வெளியூர் செல்லும் மக்கள் சிலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் மக்களின் நலனுக்காக ஒடிசா அரசு மற்றும் தென்கிழக்கு ரயில்வேயுடன் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறோம்”
எனத் தெரிவித்துள்ளார்.