கொல்கத்தா

திர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியால் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த விலை மாதத்துக்கு ரூ.50 வீதம் உயர்ந்து தற்போது சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயுசிலிண்டர் விலை ரூ.1,118.50 ஆக உள்ளது.

கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் சரிந்ததால், கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை அவ்வப்போது குறைக்கப்பட்டது. ஆயினும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை என்பதால் அதன் விலையை குறைக்குமாறு எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

நேற்று சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு திடீரென அறிவித்தது. நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.  அக்கூட்டத்தில் விலை குறைப்பு முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர்அனுராக் தாக்குர் தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

அவர்,

”கடந்த 2 மாதங்களில் ‘இந்தியா’ கூட்டணியின் 2 கூட்டங்கள்தான் நடந்துள்ளன. அதற்குள் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது. இது, ‘இந்தியா’ கூட்டணியின் விளைவு”

என்று கூறியுள்ளார்.