மால்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது! கேரள உயர்நீதி மன்றம் அதிரடி

Must read

திருவனந்தபுரம்: மால்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது என கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கேரளாவைச் சேர்ந்த பிரபல மாலான லுலு மால் தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் உள்ள மால்களில் வாகன கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் மால்கள் மற்றும் வணிக வளாகங்களில் வாகனங்கள் நிறுத்துவதிற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரு சக்கரம் வாகனம் முதல் 4 சக்கர வாகனம் வரை, பார்ட்டிக் கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்பட்டு வருகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சாமானியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள பிரபல மால்களில் ஒன்றான லுலு மாலில் வசூலிக்கப்படும் பார்ட்டிங் கட்டணம் எதிர்த்து கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மால்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் வணிக வளாகங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க உரிமை இல்லை என்றும் கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், கட்டட விதிகளின்படி, போதிய வாகன நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே கட்டடம் கட்டுவதற்கு அனுமதி உண்டு என்றும் தெரிவித்துள்ளது.

More articles

Latest article