பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வரும் 17ந்தேதி நடைபெற உள்ள எதிர்க்கட்சி தலைவர்களின் 2வது ஆலோசனைகூட்டத்துக்கு ஒத்த எண்ணம் கொண்ட கட்சி தலைவர்கள் அனைவரும் வரவேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

2026 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயலாற்றும் வகையில், எதிர்க்கட்சிகள் பணியாற்றி வருகின்றன. இது தொடர்பான முதல்கட்ட ஆலோசனை கூட்டம் ஏற்கனவே ஒடிசாவில், மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்று முடிந்தது. அதில் சில சலசலப்புகள் எழுந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து 2வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி தலைவர் தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த மாதம் (ஜூலை)  17-18 தேதிகளில் பெங்களூருவில்  ஒன்றிணைந்த எதிர்கட்சியின் கூட்டம் நடைபெற உள்ளது. ஜூலை 17ம் தேதி மாலை 6 மணிக்கு கூட்டம் தொடங்கும். அதைத் தொடர்ந்து இரவு விருந்தும், ஜூலை 18ம் தேதி காலை 11 மணிக்கு 2வது நாள் கூட்டம் தொடங்கும் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக அரசுக்கு எதிராக  “ஒத்த எண்ணம்” கொண்ட கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கார்கேவின் அழைப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பதிவிட்டுள்ள டிவிட்டில், பாட்னாவில் மாபெரும் வெற்றி பெற்ற அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்குப் பிறகு, அடுத்த கூட்டத்தை 2023 ஜூலை 17 மற்றும் 18 தேதிகளில் பெங்களூருவில் நடத்துவோம்.

பாசிச மற்றும் ஜனநாயக விரோத சக்திகளை தோற்கடித்து, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஒரு துணிச்சலான பார்வையை முன்வைப்பதற்கான எங்கள் அசைக்க முடியாத உறுதியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என கூறியுள்ளார்.

இதற்கிடையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசின் டெல்லி சேவைகள் ஆணையை கண்டித்து கிராண்ட் ஓல்ட் கட்சியின் பொது அறிக்கைக்காக காத்திருப்பதாக  கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.