கொரோனா லாக்டவுனுக்கு பிறகு திரை நட்சத்திரங்கள் மாலத்தீவுக்கு இன்ப சுற்றுலா சென்று வருவது அதிகமானது. நடிகைகளுக்கு இல்வசமாக தங்குமிடம், உணவு உள்ளிட்டவற்றை இலவசமாக அளித்து வருகின்றனர் மாலத்தீவில்.
நடிகைகள் வேதிகா, டாப்ஸி, சமந்தா உள்ளிட்ட நடிகைகள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று அங்கே எடுக்கப்பட்ட கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். அதே போல புதிதாக திருமணமான காஜல் அகர்வாலும் தேனிலவுக்கு மாலத்தீவுக்கு சென்றார். நடிகைகள் பொதுவாக சுற்றுலா மற்றும் தேனிலவு என்றால் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதுதான் வழக்கம்.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், இந்திய பயணிகளை பல நாடுகள் தடை செய்துள்ளன. மாலத்தீவும், 27-ம் தேதி நாளை முதல் இந்தியாவிலிருந்து மாலத்தீவு வருவதற்கு தடை விதித்துள்ளது. இதன் மூலம் பாலிவுட் நட்சத்திரங்களின் மாலத்தீவு சுற்றுலா ஒரு முடிவுக்கு வந்துள்ளது.