சமீபத்தில் விஷ்ணு விஷால் படத்தில் நடிக்க நடிகர்கள் தேவை என்று ஒரு விளம்பரம் வெளியானது. அது போலியான விளம்பரம் என விஷ்ணு விஷால் எச்சரித்தார்.

அதனைத் தொடர்ந்து, சிபி ராஜ்க்கும் இந்த பிரச்னை தொடர்ந்தது . அதற்கு சிபிராஜ் யாரும் ஏமாற வேண்டாம் என எச்சரித்தார் .

அந்த பிரச்சனை அடங்குவதற்குள் அடுத்த பிரச்னை அதுல்யா ரவிக்கு ஏற்பட்டுள்ளது.

அதுல்யா ரவி தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இவர் ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் தனது பெயரில் அக்கவுண்ட் வைத்துள்ளார். தற்போது புதிதாக பேஸ்புக்கில் அக்கவுண்ட் தொடங்கி யாரோ ஒருவர் திரைபிரபலங்களுக்கு தனிப்பட்டமுறையில் செய்தி அனுப்பியுள்ளது. அவர்கள் அதுல்யா ரவியை தொடர்பு கொண்டு தெரிவித்த பிறகே, தனது பெயரில் யாரோ போலி அக்கவுண்ட் தொடங்கி இருப்பது தெரியவந்துள்ளது .

இதுபற்றி அதுல்யா ரவி புகார் அளித்துள்ளார். அவர் பேஸ்புக்கிலேயே இல்லை எனவும் எச்சரித்துள்ளார்.