கோலாலம்பூர்

லேசியாவின் பாட்மிண்டன் அரசர் என போற்றப்படும் லீ சாங் வே புற்று நோய் காரணமாக விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

பாட்மிண்டன் ரசிகர்களிடையே பெரும் புகழ் பெற்றவர் லீ சாங் வே என்னும் மலேசிய விரர் ஆவார்.  சுமார் 19 ஆண்டுகளாக புகழின் உச்சியில் உள்ள இவரை ரசிகர்கள் மலேசியாவின் பாட்மிண்டன் அரசர் என அழைத்து வந்தனர்.   இவர் பாட்மிண்டன் வீரர்கள் தர வரிசைப் படியலில் முதல் இடத்தில் உள்ளார்.  இது வரை 69 சர்வதேச பட்டங்களை பெற்றுள்ளார்.

லீ சாங் வே கடந்த சில ஆண்டுகளாக மூக்கு புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.  அதற்கு இவர் சிகிச்சை பெற்று வருகிறார்.  தற்போது இவருக்கு நோய் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   ஆகவே அவர் நேற்று தாம் விளையாட்டில் இருந்து ஓய்வு  பெற உள்ளதக அறிவித்தார்.

லீ சாங் வே, “நான் பாட்மிண்டன் விளையாட்டில் இருந்து  உடல்நிலை காரணமாக ஓய்வு பெறுகிறேன்.  என்னுடைய ஓய்வு குறித்து எனக்கே வருத்தம் உள்ளது.  ஆனால் இந்த ஓஉவு தவிர்க்க முடியாத ஒன்றகும்.   எனக்கு கடந்த 19 ஆண்டுகளாக ஆதர்வு அளித்து வந்த மலேசிய ரசிகர்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்றி” என கண்ணீருடன் தெரிவித்தார்.

அவரது இந்த முடிவு அவர் ரசிகர்களை மட்டுமின்றி அவரது சக பாட்மிண்டன் வீரர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.    இந்திய வீராங்கனை சாய்னா, “நான் நீண்ட காலமாக உங்கள் விளையாட்டை ரசித்து வருகிறேன்.   உங்கள் ஓய்வு எனக்கு வருத்தம் அளிக்கிறது.  தங்களது வருங்கால வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்’” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.   மேலும் கிடம்பி கிருஷ்ணன் மற்றும் பிரணாய் ஆகியோரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.