னாமா, பஹ்ரைன்

டல் நீருக்கடியில் ஒரு தீம் பார்க்கை பஹ்ரைன் நாடு அமைத்து வருகிறது.

அரபு நாடுகளுக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகின்றனர்.   கச்சா எண்ணெய் விற்பனையால் அரபு நாடுகளில் பல செல்வச் செழிப்புடன் உள்ளன.  அதனால் சுற்றுலாப்பயணிகளை கவர ஒவ்வொரு நாடும் ஏராளமான செலவுகள் செய்ய தயங்குவதில்லை.

அவ்வகையில் பஹ்ரைனில் டைவ் பஹ்ரைன் என்னும் பெயரில் ஒரு புதிய தீம் பார்க் அமைக்கப்பட உள்ளது.   இந்த தீம் பார்க் கடல் நீருக்கடியில் அமைக்கப்படுவதே இதன் சிறப்பு அம்சமாகும்.   சுமார் 1 லட்சம் சதுர மீட்டரில் அமைய உள்ள இந்த தீம் பார்க் நடுவில் ஒரு போயிங் விமானம் அமைக்கப்பட உள்ளது.

அதற்காக பஹ்ரைன் நாடு ஒரு உண்மையான செயல்பாடற்ற போயிங் 747 விமானம் ஒன்றை கடலில் மூழ்கடிக்க திட்டமிட்டுள்ளது   சுமார் 70 அடி நீளமுள்ள இந்த விமானத்தில் பவழப்பாறைகள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளன.  வரும் ஆகஸ்ட் மாதம் இந்த தீம் பார்க் திறக்கப்பட உள்ளது