பிஷ்டெக், கிர்கிஸ்தான்

தீவிரவாதத்துக்கு உதவும், ஊக்குவிக்கும் நாடுகள் அந்த தீவிரவாத செயலுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் எனபிரதமர் மோடி கூறி உள்ளார்

தற்போது கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் கூட்டுறவு மாநாட்டில் மோடி கலந்துக் கொண்டு வருகிறார்.   இதற்காக அவர் நேற்று கிர்கிஸ்தான் தலைநகருக்கு விமானத்தில் சென்றார்.  இந்த ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு சீன நாட்டின் அமைப்பாகும்.   இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் 2017 ஆம் வருடம் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

இந்த மாநாட்டில் இன்று இந்திய பிரதமர் மோடி உரையாற்றினார்.  அவர் தனது உரையில், “இந்தியா தீவிரவாதம் அற்ற சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறது.  அதற்கு இந்த அமைப்பில் உள்ள நாடுகள் உதவ வேண்டும்,.   அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் தீவிரவாத்தை ஒடுக்க தங்கள் ஒத்துழைப்பை இந்தியாவுக்கு அளிக்க வேண்டும்.

இதற்காக அனைத்து நாடுகளும் தங்களது குறுகிய மனப்பான்மைய விட வேண்டும்.   தீவிரவாத அமைப்புக்களுக்கு எந்த நாடும் பண உதவி, ஆதரவு மற்றும் அடைக்கலம் அளிக்கக் கூடாது.  அவ்வாறு தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் அந்த தீவிரவாத செயலுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என கூறி உள்ளார்.