31 பயணிகள் மற்றும் 3 பணியாட்களுடன் மலேசிய கப்பல் ஒன்று காணாமல் போயிருப்பது பதட்டத்தை ஏற்படுத்தி உலள்ளது.
மலேசியாவின் கிழக்கு மாநிலமான சாபாவில் இருந்து சுற்றுலா கப்பல் ஒன்று நேற்று கிளம்பியது. இதில் 31 பயணிகளுடன் 3 பணியாட்களும் இருந்தார்கள். பயணிகளில் குறைந்தது 28 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
படகு புறப்பட்ட அரை மணி நேரத்தில், துறைமுகத்துடனான தனது தொடர்பை இழந்துள்ளது. மோசமான வானிலை அப்போது நிலவியது என்று மலேசியாவின் கடல்சார் அமலாக்கல் துறை தெரிவித்துள்ளது.
தற்போது இந்த படகை கண்டுபிடிக்கும் பணியில் மலேசிய கடற்படை ஈடுபட்டுள்ளது.
அந்த படகில் பயணித்த உறவினர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்தினர், விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி மலேசிய அரசை கோரியிருக்கிறார்கள்.