தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது.

இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

அதனை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பிரபல மலையாளப்பட தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் ஒரு கோடி அளித்துள்ளார்.

மலையாளப்பட தயாரிப்பாளர் ஒருவர் தமிழ்நாட்டிற்கு ஒரு கோடி ரூபாய் அளித்தது ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.