தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருபவர் கேரளாவை சேர்ந்த பாமா. அவருக்கும், அருண் என்கிற தொழில் அதிபருக்கும் கடந்த 21ம் தேதி கொச்சியில் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் கோட்டயத்தில் அருண், பாமா திருமணம் நல்லபடியாக நடந்துள்ளது.

இந்து முறைப்படி நடந்த திருமண நிகழ்ச்சியில் பாமா காஞ்சிபுரம் பட்டுப் புடவை அணிந்து அழகாக இருந்தார்.

பாமா திருமணத்தில் நடிகர் சுரேஷ் கோபி, நடிகை மியா ஆகியோர் கலந்து கொண்டார்களாம்.

பாமா, அருண் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொச்சியில் நடக்க உள்ளது.

பாமா அக்கா கணவரின் கிளாஸ்மேட் தான் இந்த அருண். அருண் துபாயில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.