விஜய்- மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ள “மாஸ்டர்” திரைப்படம் எட்டு மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது.

கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், அந்த படத்தை ரிலீஸ் செய்ய இயலவில்லை.

ஓ.டி.டி. தளத்திலும் மாஸ்டர் படத்தை வெளியிட விஜய் மற்றும் தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) வெளியிடப்படுவதாக செய்திகள் பரவின.

இது குறித்து மும்பையில் தீபாவளி கொண்டாட்டத்துக்கு தயாராக இருக்கும் மாளவிகாவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு மாளவிகா “எனக்கு இது குறித்து எதுவும் தெரியாது. மற்றவர்கள் போல் நானும், மாஸ்டர் திரைப்படம் கோடை காலத்தில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் கொரோனா பரவலால் வெளியாக வில்லை.

இப்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. எனினும் மாஸ்டர் திரைப்படத்தை எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது அதன் தயாரிப்பாளர்களுக்கு தெரியும். கொரோனா குறைந்து தியேட்டரில் பொதுமக்கள் படம் பார்ப்பதற்கு, பாதுகாப்பான சூழல் நிலவினால் மட்டுமே மாஸ்டர் படத்தை திரையிடலாம் என்பது எனது கருத்து” என பதில் அளித்தார்.

– பா. பாரதி