
பிர்மிங்ஹாம், பிரிட்டன்
பாகிஸ்தான் பெண் போராளி மலாலா ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க விண்ணப்பித்திருந்தார். அவருக்கு நேற்று பல்கலைக்கழகம் படிக்க இடம் கொடுத்துள்ளது.
மலாலா பாகிஸ்தானை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பெண் போராளி. ஐநா சபையின் அமைதித் தூதுவரான இவர், தற்போது பிர்மிங்ஹாமில் வசித்து வருகிறார். தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மேல்படிப்புக்காக இவர் உலகப் புகழ் பெற்ற அக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு படிக்க இடம் அளிக்கும் அறிவிப்பை நேற்று பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இருவது வயதான மலாலா ஏற்கனவே தனது பட்டப்படிப்பை ஏ கிரேடுடன் மேற்கண்ட பிரிவுகளில் முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனக்கு மேல்படிப்புக்கு வாய்ப்பளித்த பல்கலைக்கழகத்துக்கு நன்றி கூறி மலாலா தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி பதிந்துள்ளார். இதே நன்றி அறிவுப்பு செய்தியை மலாலாவின் தந்தை ஜியாவுதினும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.
[youtube-feed feed=1]