சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் மாலா மற்றும் சௌந்தர் இன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மாலா மற்றும் சௌந்தரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 24ந்தேதி நியமித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் இன்று கூடுதல் நீதிபதிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர்.  இருவருக்கும் தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 2 ஆண்டுகள் நீதிபதிகளாக பதவி வகித்த பிறகு 2 பேரும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவர்.

இன்று கூடுதல் நீதிபதிகள் 2 பேர் பதவி ஏற்றதன் மூலம்  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 14 பணியிடங்கள் காலியாக உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா மற்றும் எஸ்.சௌந்தர் நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

[youtube-feed feed=1]