டில்லி:

டிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி உள்ளார். இந்த கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்  கொடுத்துள்ளார்.

இந்த விண்ணப்ப மனுவை  தேர்தல் ஆணையம். பரிசீலனைக்கு ஏற்றுள்ளது. அதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்பாக செய்தித்தாள்களில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதில், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி  பதிவு செய்வதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால், மே 31-க்குள் தெரிவிக்கலாம் என்று  தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

அரசியலுக்கு வரப்போவதாக கடந்த ஆண்டு கூறி வந்த நடிகர் கமலஹாசன், கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கினார். பிப்ரவரி மாதம் 21ந்தேதி  மதுரை ஒத்தக்கடையில்  தனது அரசியல் பிரகடன பொதுக் கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் என்ற தனத கட்சியின் பெயரை கமல்ஹாசன் அறிவித்தார். அத்துடன்  இணைந்த கைகள் கொண்ட சின்னம் பொறித்த கட்சி கொடியையும் கமல்ஹாசன் ஏற்றினார்.

அதைத்தொடர்ந்து கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு  விண்ணப்பித்து, அதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.