டெல்லி:

டை செய்யப்பட்ட ரசாயனம் மூலம் தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணையைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சுற்றுச்சூழல் மாசுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்கவோ, வெடிக்கக்கூடாது என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைகளைத் தொடர்ந்து,  டெல்லி நகரத்தில் பட்டாசுக்களை வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மற்ற மாநிலங்களில் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத பசுமை பட்டாசுகளை தயாரித்து உபயோகப்படுத்த உத்தரவிட்டது.

ஆனால்,  நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கவும், தயாரிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று அர்ஜுன் கோபால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது,  தமிழகத்தில் பசுமை பட்டாசுகள் முறையாக தயாரிக்கப்படவில்லை என்றும், தடை செய்யப்பட்ட மூலக்கூறுகளைப் பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகவும் பட்டாசு ஆலைகள் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் இயங்கும் பட்டாசு ஆலைகள் விதிகளை மீறி பட்டாசு தயாரித்ததா? பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மூலக் கூறுகள் பயன்படுத்தப்பட்டனவா? என்பது குறித்து உண்மையைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யவும் சிபிஐ இணை இயக்குநருக்கு (சென்னை) உத்தரவிட்டுள்ளது.