திருவண்ணாமலை: ‘என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்’  என்று வாக்காளர்களிடம் கண்ணீருடன் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில்  அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, மக்களிடையே வாக்கு சேகரித்து வருகிறார். நேற்றைய பிரசாரத்தின்போது,  ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்திலுள்ள திரௌபதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு  பிரசாரத்தை தொடங்கியவர், அந்த பகுதியில் உள்ள பாமக நிர்வாகிகளை சந்தித்து பெசினார். அப்போது அமைச்சர் கண்ணீர் மல்க அழுது கொண்டே தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என கூறினார். அப்போது அவரது கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அதைத்துடைத்துக்கொண்டே அமைச்சர் ஆதரவு கோரியது சோகத்தை ஏற்படுத்தியது.
அமைச்சர் கண்ணீர்விடுவதை கண்ட அந்தப்பகுதி மக்களும், பாமக நிர்வாகிகளும்,  கண்டிப்பாக நீங்கள் தான் வெற்றி பெற்று அடுத்த சட்டமன்ற உறுப்பினராக செல்வீர்கள் என ஆறுதல் கூறினர்.
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சொத்து விவரம் தெரிய வேண்டுமா? கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்..