சென்னை
சென்னை நகரில் கொரோனா சிகிச்சை மையங்கள் நிரம்பி உள்ளதால் நகரில் உள்ள பல முக்கிய பள்ளிகளிலும் மையங்கள் அமைக்கப்படுகிறது.
இரண்டாம் அலை கொரோனாவால் நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்த்ஹில் 33,181 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு 311 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று வரை 15.98 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 17,670 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று வரை 13.61 லட்சம் பேர் குணமடைந்து 2.19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
இதனால் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை மையங்களிலும் புதிய நோயாளிகளுக்கு இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி தமிழக அரசு பல மாற்று ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. சென்ற ஆண்டு முதல் அலையின் போது மருத்துவமனைகளில் இடம் இல்லாத நிலை உண்டானது. அப்போது சென்னை மாநகராட்சியின் 66 பள்ளிகள் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டது., அதன் பிறகு அப்பள்ளிகள் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த அண்டும் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி சென்னையில் உள்ள அனைத்து அரசு, மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் உள்ளிட்டவற்றைச் சிகிச்சை மையங்களாக மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நகரில் பல முக்கிய பள்ளிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாறி வருகிறது.