அமராவதி: கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஆந்திராவில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார்.

கொரோனா பரவலின் 2 வது அலை நாடு முழுவதும் பெரும் பீதியை கிளப்பி இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில், கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை யும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் தொற்று பாதிக்கப்பட்டோர்களால் நிரம்ப் வழிகிறது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. தொற்று பரவலை தடுக்க ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி,  குஜராத், கேரளா, தமிழகம், கர்நாடகம் உள்பட பல மாநிலங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஆந்திராவில் ஊரடங்கு மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்படுமாவ மாநில முதல்வர் அறிவித்து உள்ளார்.  தற்போது,  காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப் படுகிறது. இந்நிலையில்  வரும் 31- ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.