காஷ்மீர்:

மேஜர் லீதுல் கோகோய் எங்கள் வீட்டை 2முறை சோதனை செய்தார் என்று, அவர் அழைத்துச் சென்ற இளம்பெண்ணின் தாய் புகார் கூறி உள்ளார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு காஷ்மீர் பகுதியில் உள்ள விடுதிக்கு, இளம் பெண் ஒருவருடன் சென்ற மேஜர் லீதுல் கோய் அங்கு தகராறில் ஈடுபட்டார். அப்போது அவருடன் சமீர் என்பவரும் இருந்தார்.

விடுதி மேலாளர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து, காவலர் விசாரணை செய்தபோது, அந்த இளம்பெண்ணுடன் சேர்ந்து, 3 பேரும் தங்க அறை கேட்டதாகவும் அதை மறுத்ததால் விடுதி மேலாளருடன் தகராறு செய்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், லீகுல் உடன் சென்ற இளம்பெண்ணின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்.

காஷ்மீரில் உள்ள  புத்காம் கிராமத்திலுள்ள வசித்து வரும் அவர்,   கடந்த வியாழக்கிழமை அன்று  கிராமத்திலுள்ள மற்றவர்களுடன்  வயல்களில் வேலை செய்ய நாங்கள் சென்றோம் என்றும், அன்று இரவு மேஜர் லீகுல், சமீர் உடன் வந்து எனது வீட்டை சோதனை செய்தார். இரண்டு முறை சோதனை நடைபெற்றது. ராணுவ அதிகாரியை நான் பார்த்தும் மயங்கி விட்டேன். என்று அவர் கூறி உள்ளார்.

அவரது மகளை, கடந்த புதன்கிழமை  சுய உதவிக்குழு ஒன்று தொடர்பு கொண்டது என்றும், அதன் காரணமாக நான்  வங்கிக்கு ஆதார் கார்டு உள்பட  ஆவனங்களுன் சென்றதாகவும் அவருக்கு வயது 17 என்றும் கூறினார். அதன்பிறகே இந்த சம்பங்கள் நடைபெற்றுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

மேஜர் லீகுல் அந்த இளம்பெண்ணை, விடுதிக்கு அழைத்து சென்றது பெரும் பிரச்சினை ஆனது. அதைத்தொடர்ந்து அந்த இளம்பெண்ணின் தாயார் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அந்த இளம்பெண்  1998ம் பிறந்ததாகவும், அவர் ஒரு உறவினருடன் தங்க  சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்  என்றும் கூறி உள்ளார்.

ஏற்கனவே லீகுல் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு காஷ்மீரில் பொது மக்களின் கல்வீச்சை தடுக்கும் நோக்கில், பரூக் அகமது  என்பவரை ராணுவ ஜீப்பில் முன்னால் கட்டி 28 கிமீ வரை கேடயமாக பயன்படுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.