டெல்லி: விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் சென்ற நீரஜ் சோப்ரா உள்பட 12 வீரர்களுக்கு தயான்சந்த் கேல் ரத்னா விருதும், 30 வீரர்களுக்கு அர்ஜூனா விருதுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

விளையாட்டு போட்டிகளில் தேசிய அளவில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி, 2021ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, உள்பட 12 விளையாட்டு வீரர்களுக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது (ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ) அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விருதுடன் ரூ.25 லட்சம் ரொக்கப்பரிசும் கிடைக்கும். அத்துடன் 35 இந்திய விளையாட்டு வீரர்களும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விருதுகள் வழங்கும் விழா நவம்பர் 13, 2021 அன்று (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெறும் விழாவில், இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்து வீரர்களுக்கு விருதுகளை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கேல் ரத்னா விருது பெறும் வீரர்களின் விவரம்:
ஒலிம்பிக் தங்கப்பதக்கம் பெற்ற வீரர் நீரஜ் சோப்ரா, மல்யுத்த வீரர் ரவிகுமார் தஹியா, குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன், இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், பாரா ஷூட்டர் அவனி லெகாரா, பாரா தடகள வீரர் சுமித் அன்டில், பாரா பேட்மிண்டன் வீரர்கள் பிரமோத் பகத் மற்றும் கிருஷ்ணா நகர், பாரா ஷூட்டர் மணீஷ் நர்வால், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கேப்டன். மன்பிரித் சிங், இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்,கால்பந்து வீரர் சுனில் சேத்ரி.
அர்ஜூனா விருது பெறும் வீரர்களின் விவரம்:: அர்பிந்தர் சிங் (தடகளம்), சிம்ரஞ்சித் கவுர் (குத்துச்சண்டை), ஷிகர் தவான் (கிரிக்கெட்), சிஏ பவானி தேவி (ஃபென்சிங்), மோனிகா (ஹாக்கி), வந்தனா கட்டாரியா (ஹாக்கி), சந்தீப் நர்வால் (கபடி), ஹிமானி உத்தம் பரப் (மல்லகம்பம்) ), அபிஷேக் வர்மா (படப்பிடிப்பு), அங்கிதா ரெய்னா (டென்னிஸ்), தீபக் புனியா (மல்யுத்தம்), தில்ப்ரீத் சிங் (ஹாக்கி), ஹர்மன் ப்ரீத் சிங் (ஹாக்கி), ருபிந்தர் பால் சிங் (ஹாக்கி), சுரேந்தர் குமார் (ஹாக்கி), அமித் ரோஹிதாஸ் (ஹாக்கி) ), பிரேந்திர லக்ரா (ஹாக்கி), சுமித் (ஹாக்கி), நீலகண்ட ஷர்மா (ஹாக்கி), ஹர்திக் சிங் (ஹாக்கி), விவேக் சாகர் பிரசாத் (ஹாக்கி), குர்ஜந்த் சிங் (ஹாக்கி), மந்தீப் சிங் (ஹாக்கி), ஷம்ஷேர் சிங் (ஹாக்கி), லலித் குமார் உபாத்யாய் (ஹாக்கி), வருண் குமார் (ஹாக்கி), சிம்ரன்ஜீத் சிங் (ஹாக்கி), யோகேஷ் கதுனியா (பாரா தடகளம்) நிஷாத் குமார் (பாரா தடகளம்), பிரவீன் குமார் (பாரா தடகளம்), சுஹாஷ் யதிராஜ் (பாரா பேட்மிண்டன்) சிங்ராஜ் அதானா (பாரா ஷூட்டிங்) ), பவினா படேல் (பாரா டேபிள் டென்னிஸ்), ஹர்விந்தர் சிங் (பாரா வில்வித்தை) மற்றும் ஷரத் குமார் (பாரா தடகளம்).