டில்லி:

அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.பி. மைத்ரேயன் இன்று டில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்தார்.

அப்போது அவர், “அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது.  விரைவில் முறைப்படி தேர்தல்  ஆணையத்தின் கண்காணிப்பில் பொதுச்செயலாளருக்கான தேர்தலை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

மேலும், “சசிகலா தலைமையிலான அணிக்கு, இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தும் உரிமை இல்லை. இது குறித்து முடிவு எடுக்கும் வரை, இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்” என்றும் கோரினார்.