சென்னை:  பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெமு ரயில்களின் சேவைகள் இன்று  ரத்து செய்யப்பட்டு உள்ளன.  5 மெமு ரயில்கள் முழுமையாகவும், 4 மெமு ரயில்கள் பகுதியளவிலும் ரத்து  செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து   சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சென்ட்ரல் – கூடூர் இடையிலான தாடா மற்றும் சூலூர்பேட்டை ரயில் நிலையங்களில் தண்டவாள பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் இன்று (27ம் தேதி) அதிகாலை 12.50 மணி முதல் காலை 8.50 மணி வரை நடைபெறுகிறது.

இதன்காரமாக, மூர்மார்க்கெட் – சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை – நெல்லூர், நெல்லூர் – சூலூர்பேட்டை மற்றும் பிற்பகல் மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் செல்லும் ரயில், ஆவடியில் இருந்து மூர்மார்க்கெட் செல்லும் மெமு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மூர்மார்க்கெட்டில் இருந்து அதிகாலை 4.15 மற்றும் 5 மணிக்கு புறப்படும் ரயில்கள் எளாவூர் வரை பகுதியாக இயக்கப்படும். அதேபோல் சூலூர்பேட்டையில் இருந்து 6.45 மற்றும் 7.25 மணிக்கு மூர்மார்க்கெட் செல்லும் ரயில்கள் மற்றும் காலை 7.25 மணிக்கு சென்னை கடற்கரைக்கு செல்லும் ரயிலும் பகுதியளவில் இயக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]