சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை  கடற்கரை – செங்கல்பட்டு இடையே பல மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை மக்களின் இன்றையமையாக பயண சேவையாக புறநகர் மின்சார ரயில்கள் இயங்கி வருகின்றன.  சமீப காலமாக மெட் ரெயில்களும் சென்னை  நகர மக்களின் வாழ்வியலுடன் ஒன்றிணைந்து வருகிறது. போக்குவரத்து நெரிசல்,  பயண கட்டணம் போன்றவற்றால் பெரும்பாலோனோர் மின்சார மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளேயே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  பராமரிப்பு பணிகள்  சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்கள் இரு நாட்கள்  ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் முக்கிய ரயில்கள் இன்று மற்றும் நாளை ரத்து செய்யப்படுகிறது

இதற்கு பதிலாக,  பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 நிமிட இடைவெளியில் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோன்று 20 நிமிட இடைவெளியில் பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதேபோல் கூடுவாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டு வரை சிறப்பு ரயில்களும் அதே போன்று செங்கல்பட்டில் இருந்து கூடுவாஞ்சேரி வரை சிறப்பு ரயில்களும் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படவுள்ளது.

சென்னை கடற்கரையிலிருந்து பல்லாவரத்துக்கு இரவு 11.59 மணிக்கும், மறுமார்க்கமாக, பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 12.45 மணிக்கும் கடைசி சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது.

இதேபோல, கூடுவாஞ்சோியிலிருந்து செங்கல்பட்டுக்கு இரவு 11.55 மணிக்கும், மறுமார்க்கமாக, செங்கல்பட்டிலிருந்து கூடுவாஞ்சோிக்கு இரவு 11 மணிக்கும் கடைசி சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது.

மேலும் 29-ம் தேதி முதல் ஆகஸ்டு 2-ம் தேதி வரை பகல் நேர மின்சார ரெயில் சேவை வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும்.

ஆகஸ்டு 3-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மின்சார ரெயில் சேவைகள் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏற்கனவே அறிவித்தது போலவே பகல் மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்யப்படும்.