சென்னை: பராமரிப்பு பணிக்காக இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன் கிருஷ்ணகிரியில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாலை 4மணி அல்லது 5மணிக்கு மேல்தான் மீண்டும் மின்விநியோகம் செய்யப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.

பெரம்பூர்/பெரியார் நகர் பகுதி:

எஸ்.ஆர்.பி மெயின் ரோடு/காலனி, ராம்நகர், கே.சி கார்டன், பேப்பர் மில்ஸ் பிரிவு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

போரூர் பகுதி: 

கோவூர் தண்டலம், ஆதிலட்சுமி நகர், மதுரா அவென்யூ, ஆகாஷ் நகர், தரபாக்கம் காவனூர் நடைபாதை தெரு, தச்சர் தெரு, பொன்னியமன் கோயில் தெரு, லாலா சத்திரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் பராமரிப்புபணி காரணமாக 5 இடங்களில் மின்தடை போடப்படும் என்று மின்சாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இன்று (பிப்.26) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை போடப்படும் என்று மின்சாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்

கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்டம் போச்சம்பள்ளி கோட்டத்துக்கு உட்பட்ட ஊத்தங்கரை துணை மின் நிலையத்தில் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் காரணமாக உயர்மின் பாதையை மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது. எனவே இன்று (பிப்.26) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை காமராஜ் நகர், எழில்நகர், கலைஞர் நகர், வித்யா நகர், அம்பேத்கர் நகர், நேரு நகர், பனந்தோப்பு, பஸ் நிலைய பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.