ஜெனிவா: ஐ.நா. தலைமையகத்தில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள மார்பளவு  காந்தி சிலையை  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்/

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை, அந்தக் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மாதந்தோறும் சுழற்சி முறையில் ஏற்கும். இதன் தொடா்ச்சியாக டிசம்பா் மாதத் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலை நேற்று (15ந்தேதி)  திறக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் உயர்ந்த மதிப்புகளை நினைவூட்டும் வகையில், இந்தியயா ஐ.நா.வுக்கு பரிசாக  அளித்த காந்தி சிலை,  ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நிறுவப்பட்டு உள்ளது. இந்த சிலையை, புகழ்பெற்ற இந்திய சிற்பியும், ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவருமான ராம் சுதாா் வடிவமைத்ததாகும்.

முன்னதாக  இருநாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும், அன்டோனியோ குட்டரெஸும் இணைந்து  ஐ.நா. தலைமையகத்தில் கதந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தனர். இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து உறுப்பு நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஏற்கனவே கடந்த 1982-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி இந்தியா சாா்பில் ஐ.நா.வுக்கு சூா்ய பகவான் சிலை பரிசாக அளிக்கப்பட்டது. அது பாலப் பேரரசு கால 11-ஆம் நூற்றாண்டு கருங்கல் சிலையாகும். அதனை முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பரிசாக அளித்தாா். அந்த சிலை ஐ.நா. மாநாட்டு கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைதான் ஐ.நா.வுக்கு இந்தியா அளித்த முதல் பரிசு. இ

தற்போது ஐ.நா.வில் திறக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலை இந்தியாவின் 2-ஆவது பரிசாகும். அந்த சிலை திறக்கப்பட்டுள்ள ஐ.நா. தலைமையகப் புல்வெளிப் பகுதியில் 1961 முதல் 1989-ஆம் ஆண்டு வரை ஜொ்மனியை பிரித்த பொ்லின் சுவரின் பகுதிகள், தென் ஆப்பிரிக்கா பரிசாக அளித்த நெல்சன் மண்டேலா சிலை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், மகாத்மா காந்தியை “அமைதியான சகவாழ்வுக்கான சமரசமற்ற வக்கீல்” என்றும், அமைப்பில் காந்தியின் மார்பளவு அவர் நிலைநிறுத்தப்பட்ட மதிப்புகளை நினைவூட்டுவதாக இருக்கும் என்றும் கூறினார்.

“மகாத்மா காந்தி அமைதியான சகவாழ்வு, பாகுபாடு இல்லாமை மற்றும் பன்மைத்துவத்திற்காக சமரசம் செய்யாத வக்கீலாக இருந்தார். @UN தலைமையகத்தில் அமைந்துள்ள புதிய நிறுவல் காந்தி உயர்த்திய மதிப்புகளை நினைவூட்டுவதாக இருக்கும், அதற்கு நாம் உறுதியுடன் இருக்க வேண்டும்” என்று குட்டெரெஸ் டிவீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக டிவீட் செய்துள்ள  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் , சர்வதேச நாடுகளை சிறந்த லட்சியங்களை நோக்கி உந்தச்செய்யும் சக்தியாக காந்தியின் இருப்பு அமையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஐநாவுக்கான இந்திய நிரந்தர தூதுக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குட்டெரெஸ் மற்றும் 77வது ஐநா பொதுச் சபையின் தலைவர் சபா கொரோசி மற்றும் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா காம்போஜ் ஆகியோர் இந்த நிகழ்வில் EAM உடன் இணைந்து மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதாக  தெரிவித்துள்ளது.

முன்னதாக நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் விருப்பமான ‘வைஷ்ணவ் ஜன் தோ’ பஜனை வாசிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையானது ஐக்கிய நாடுகள் சபையின் வடக்கு புல்வெளி தோட்டத்தில் நிரந்தரமாக அமைந்துள்ள காந்தியின் முதல் சிற்பமாகும். குஜராத்தில் உள்ள கெவாடியா அருகே 182 மீட்டர் உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமை சிலையை உருவாக்கியவர் ராம் வஞ்சி சுதார்.

இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் உயர்மட்ட பிரதிநிதிகள், உள்வரும் உறுப்பினர்கள் மற்றும் ஐ.நா.வின் மூத்த அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அமெரிக்காவில் முகாமிட்டுள்ள அமைச்சர்  ஜெய்சங்கர், “அமைதி காவலர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கான நண்பர்கள் குழு” ஒன்றையும் தொடங்குவார், மேலும் குட்டெரெஸுடன் சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“சர்வதேச தினை ஆண்டு 2023” பற்றிய இந்தியாவின் முன்முயற்சியை விளக்கும் ஒரு சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் மதிய உணவு திரு.ஜெய்சங்கரால் ஐ.நா பொதுச்செயலாளர் மற்றும் UNSC உறுப்பு நாடுகளுக்கு நடத்தப்படும் என்றும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா. சபை தலைமையகத்தில் வரும் 14ந்தேதி திறக்கப்படுகிறது மகாத்மா காந்தி சிலை…